நெஞ்சம் பதைக்கிறது.! மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.!

MK Stalin DMK

டெல்லியில்  நடந்து வரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக பாலியல் புகாருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்து 9வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் கோரிக்கைப்படி, பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

திமுக ஆதரவு:

தற்போது, மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் திமுக எம்பி அப்துல்லா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்:

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்