அம்பேத்கர் சிலைஉடைக்கப்பட்ட விவகாரம்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘ அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். எனவும், தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ என் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், ‘அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயலுக்கு கடும் கண்டனம்.’ எனவும், ‘தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.’ என தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025