தமிழில் சி.ஆர்.எஃப் தேர்வை நடத்த வேண்டும்.! அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

Default Image

சி.ஆர்.பி.எப். கணினி தேர்வை  தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உள்துறை அமைச்சகம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) சுமார் 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கடந்த வியாழனன்று, வெளியிட்டது. இதில், அக்னிவீரர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.

இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். ஆனால், இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது, இது குறித்து தனது கடிதத்தில் மு.க.ஸ்டாலின், சிஆர்பிஎஃப் ஆட்சேர்க்கைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன, இருப்பினும் தேர்வில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்