அரியலூர் மருத்துவ கல்லூரியில் புதிய வளாகத்திற்கு மாணவி அனிதா பெயர் சூட்டி முதல்வர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா எனும் மாணவி, மருத்துவ நுழைவு தேர்வான நீட் நுழைவு தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, பின்னர், 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தடை :
அதன் பிறகு நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீட் தடை மசோதா நிறைவேற்றயது. நீட் தேர்வை தடை செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
நீட் பயிற்சி மையம் :
நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த அனிதா நினைவாக, ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
22 கோடி ரூபாய் :
தற்போது , கடந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்ட அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில் புதிய நவீன வசதிகளுடன் மருத்துவ வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அனிதா மருத்துவ வளாகம் :
இந்த கட்டத்திற்கு தற்போது அனிதாவின் பெயர் வைத்து, அனிதா மருத்துவ வளாகம் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…