நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார்.
இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படவில்லை. அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. என கூறி, நான் தவறாக பதிவிட்டுருந்தால் நான் ராஜினாமா செய்ய தயார். நீங்கள் தவறாக குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் பதவி விலக தயாரா என பதிலடி கொடுத்துள்ளார்.
பிறகு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், ‘ இம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிவில்நீட் விலக்கு மசோதா நிராகரிக்க பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அனால் நேற்று சி.வி.சண்முகம், நிராகரித்ததை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுகவின் இந்த செயல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது’ என கூறினார்.
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…