எம்.ஜி.ஆர். போனபோதே கவலைப்படவில்லை.. வைகோவையே தூக்கி எறிந்தோம் – ஆர்எஸ் பாரதி பகிர் பேட்டி

Default Image

திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து.

திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி எறிந்தோம் எனவும் பகிரனே தெரிவித்தார்.

இதனால் யார்போனாலும் கவலை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் தேம்ஸ் நதி போல், men may come and men may go but we go on for ever என்று கூறிய ஆர்எஸ் பாரதி, யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. தேம்ஸ் நதியை போல் திமுக சென்றுகொண்டியிருக்கிறது. தற்போது 70 ஆண்டுகளாக கடந்து செல்லும் திமுக 100 ஆண்டுகளுக்கு மேல் சென்று கொண்டியிருக்கும் என கூறினார்.

இதனிடையே, எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா “திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்” என தெரிவித்து பாஜகவில் இணைத்தார் என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல் என கூறி, உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்