எம்.ஜி.ஆர். சகோதரர் மகன் கொரோனாவால் உயிரிழப்பு..முதலவர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்.!

எம்.ஜி.ஆர் சகோதரர் சக்ரபாணியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். சகோதரர் சக்கரபாணியின் மகன் சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் சக்கரபாணியின் மகன் மறைவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் பெரியவர் திரு. M.G. சக்கரபாணி அவர்களின் மகன் திரு. M.C. சந்திரன் அவர்கள் (வயது 75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
அன்புச் சகோதரர் திரு. சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
புரட்சித்தலைவர் Dr.MGR அவர்களின் சகோதரர் திரு.M.G.சக்ரபாணி அவர்களது மகன் திரு.M.C.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வேதனையுற்றேன்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். pic.twitter.com/B66KIXouLH
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 11, 2020