பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு.
யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சகல வசதிகளை வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான நிலையில், சிறை அதிகாரி செல்வதை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…