ரஷ்யாவை சேர்ந்த மாஸ்டர் நாசவ் டயனோவ் என்ற சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள்.
ரஷ்யாவை சேர்ந்த மாஸ்டர் நாசவ் டயனோவ் என்ற சிறுவனுக்கு பிறந்த இரண்டு மாதத்திலேயே நுரையீரல் காற்று பிரிக்கும் திறன் பாதிப்பு நோய் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறுவன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின் சிறுவனுக்கு தொண்டை வழியாக குழாய் பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். இங்கு இரண்டு வயது சிறுவனிடம் நுரையீரல் தானமாக பெறப்பட்ட நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கார்டியாக் சயின்ஸ் துறைத் தலைவரும் இயக்குநரும், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குநருமான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டது.
இதுகுறித்து டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், மருத்துவமனையின் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சாட்சியாக ரஷ்ய சிறுவன் உயிரோடு இருக்கிறான். குழந்தை ஒருவனை மூன்று ஆண்டுகளாக வெண்டிலேட்டரில் எந்த பிரச்சனையும் இன்றி வைத்திருப்பது என்பது இந்த உலகின் மிகவும் கடினமான பணியாகவே இருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம் இணை இயக்குனர் சுரேஷ் ராவ் கூறுகையில், கடந்த 2018ல் ரஷ்யாவை சேர்ந்த சிறுவன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2020இல், குஜராத்தை மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானமாக கிடைத்தது.
இதனையடுத்து விமானம் மூலமாக உடனடியாக நுரையீரல் கொண்டுவரப்பட்டது. பின் அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் ஒரு மாதங்களுக்குப் பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளான். 4 வயது சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…