#BREAKING : விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார் – பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என பழ நெடுமாறன் பேட்டி.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார்.
பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். தமிழினம் பற்றி விரிவான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார். பிரபாகரன் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருப்பதால் அவர்கள் அனுமதியுடன் இதை கூறுகிறேன்.
உரிய நேரத்தில் வெளிப்படுவார்
பிரபாகரன் குறித்து தற்போது அறிவித்ததற்கான காரணம் என்னவென்றால், இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார். தற்போது அவர் இருக்கும் இடத்தை கூற முடியாது என தெரிவித்துள்ளார். இலங்கை போரில் பிரபாகரன் 2009 மே- 18ஆம் தேதி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பழ நெடுமாறன் புதிய தகவலை அளித்துள்ளார்.