புலிகளின் ஆலோசகர் வெடிகுண்டு கொலை வழக்கு – ரத்து செய்ய மறுப்பு!

Default Image

விடுதலைப்புலியின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் இருந்தவர் பாலசிங்கம்.கடந்த 1985ம் ஆண்டு  இவரை கொலை செய்யும் நோக்குடன் சென்னை பெசண்ட் நகரில் உள்ள  அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது.

வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் பெருத்த சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் குண்டுவெடிப்பு தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு எதிராக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது விசாரணையில் இறங்கியது.

மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். ரஞ்சன், மணவைதம்பி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதில் வி.கே.டி பாலன் மட்டுமே வழக்கை எதிர் கொண்டு வந்தவர்.வழக்கு தொடர்ந்த வி.கே.டி பாலன் என்பவர் பிரபல தொழிலதிபர் மற்றும் கலைமாமமணி விருது பெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மனுவானது நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது இவ்வழக்கு குறித்து காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றத்தை ஒப்புகொண்டவகள்  உள்ளிட்ட சில சாட்சிகள் உயிருடன் உள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தன் தரப்பு வாதத்தினை முன் வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக எல்லாம் வழக்கை ரத்து செய்ய முடியாது.மேலும் உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலம் வழக்கை நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் நீதியரசர் வழக்கு நீண்ட கால தாமதமாக நடந்து வருகிறது. ஆவணங்கள் காணமல் போய்விட்டது இவையெல்லாம் வழக்கை ரத்து செய்வதற்கு நல்ல காரணம் அல்ல

இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை எல்லாம் சென்னை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை இன்னும் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று  சைதாபேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமர்வு நீதிமன்றம் ஆவணங்களை பெற்று சட்டப்படி விசாரணை நடைமுறைகளை துவங்க நீதிபதி உத்தரவிட்ட  நிலையில் வி.கே.டி. பாலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்