புத்தாண்டை முன்னிட்டு ரூ.4.50 குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை!

Published by
பால முருகன்

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது.  அதன்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக கடந்த 2023 டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39.50 குறைந்து ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1, 2024) மீண்டும் ரூ.4.50 குறைந்து வணிக சிலிண்டரின் விலை ரூ.1.924.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை போல டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகியவற்றிலும் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, டெல்லியில் 1.50 குறைந்து 1755.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 0.50 காசுகள் குறைந்து 1,8690.50க்கு விற்பனை.

மும்பையில் 1.50 குறைந்து 1708.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ள நிலையில், சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 29ஆம் தேதிவிலை ரூ.200 குறைந்து ரூ.918.50க்கு விற்பனை ஆன நிலையில் அதே எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Recent Posts

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…

4 minutes ago

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

1 hour ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

2 hours ago

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

11 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

13 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

14 hours ago