புத்தாண்டை முன்னிட்டு ரூ.4.50 குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை!

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. அதன்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக கடந்த 2023 டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39.50 குறைந்து ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1, 2024) மீண்டும் ரூ.4.50 குறைந்து வணிக சிலிண்டரின் விலை ரூ.1.924.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை போல டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகியவற்றிலும் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, டெல்லியில் 1.50 குறைந்து 1755.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 0.50 காசுகள் குறைந்து 1,8690.50க்கு விற்பனை.
மும்பையில் 1.50 குறைந்து 1708.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ள நிலையில், சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 29ஆம் தேதிவிலை ரூ.200 குறைந்து ரூ.918.50க்கு விற்பனை ஆன நிலையில் அதே எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025