ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் புயலாக மாற வாய்ப்புள்ளதால் டிசம்பர் 8 & 9 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச. 7ம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம்.
வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…