தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு…மழைக்கு பயப்பட வேண்டுமா? வெதர்மேன் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னைக்கு இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

pradeep john Weather update

சென்னை : சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவை கொடுப்பதற்காக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இன்றும் நாளையும் பெய்யும் மழையை கண்டு மகிழுங்கள். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும்.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி KTCC கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது என்பதால் இன்று இரவும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்றும் நாளையும் சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று அடுத்த சில மணிநேரங்களில் முதல் மிதமான மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும். அலுவலக மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தவறாமல் செல்லலாம்.  இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்று கேட்டால் நிச்சியமாக இல்லை. ஏனென்றால், கிறிஸ்மஸுக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான குடிநீரைக் கொடுத்த இந்த பருவமழையை அனுபவிப்போம்.

இந்த மழையால் நீங்கள் பயப்பட வேண்டுமா? என்று கேட்டால் இல்லை என்பது தான் என்னுடைய பதில் . அணைகள் நிரம்பியிருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டுமா என்றால் அதுவும் இல்லை. மற்ற மாவட்டங்களான டெல்டா, விழுப்புரம் கடற்கரை, பாண்டி கடலூர் – மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக குமரியில் மட்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த மழை பொறுத்தவரையில் சென்னைக்கு மட்டுமே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை ராணிப்பேட்டையிலும் சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும்” முக்கியமான தகவலை பிரதீப் ஜான் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்