இதற்காக தான் தாழ்தள பேருந்துகளை தவிர்க்கிறோம்… உயநீதிமன்றத்தில் சென்னை போக்குவரத்து கழகம் விளக்கம்.!
சென்னையில் பல்வேறு சாலைகள் குறுகலாகவும், சேதமடைந்து இருக்கிறது . அந்த பகுதியில் தாழ்கள பேருந்துகளை இயக்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பேருந்துகளும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. என சென்னை போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு அண்மையில் புதியதாக 1190 பேருந்துகளை வாங்குவதாக அறிவித்து இருந்தது. அதில் தாழ்தள பேருந்துகள், அதாவது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதாக ஏறி இறங்கும் வகையில் இருக்கும் தாள்தலை பேருந்துகளை வாங்குவது குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. இதனை குறிப்பிட்டு தமிழக அரசு தாழ்தள பேருந்துகள் வாங்க வேண்டும் எனவும் ஏன் வாங்கவில்லை எனவும் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடைபெற்றபோது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை கழகம் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று அதற்கான பதிலை சென்னை போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
அதில், சென்னையில் பல்வேறு சாலைகள் குறுகலாக இருக்கிறது என்றும், அந்த பகுதியில் தாழ்தள பேருந்துகளை இயக்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பேருந்துகளும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும் விளக்கம் அளித்தது.
தற்போது 342 தாழ்தள பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அதற்காக 65 வழித்தடங்களை தேர்வு செய்து இந்த 65 வழிதடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் அந்த பாதைகளில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. மேலும், சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கிறது.
இந்த சமயம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது கடினம் என குறிப்பிட்டு தங்களது பதிலை கூறினர். இதனை விசாரித்த நீதிமன்றம் எந்தெந்த பகுதியில் தாழ்தள பேருந்துகளை இயக்கலாம் என கள ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.