வேலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் நிவேதா (17) இவர் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் உள்ள கேன்டீனில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11-ம் தேதி வேலைக்கு சென்ற நிவேதா வீடு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை இதையடுத்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அன்று ஒரு கல் குவாரியில் உள்ள குட்டையில் அழுகிய நிலையில் இருந்து நிவேதா உடல் மீட்கப்பட்டது. நிவேதாவின் கையில் பறவையின் இறகு பச்சை குத்தப்பட்டு இருப்பதை வைத்து தான் போலீசாரை இது நிவேதா என உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நிவேதிதாவின் செல்போனில் கடைசியாக வந்த நம்பரை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பிரகாஷ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில் நிவேதாவும் நானும் இரண்டு மாதமாக காதலித்து வந்தோம். நிவேதா திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் . நிவேதாவிற்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் இருப்பதால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தேன்.
சம்பவம் நடந்த அன்று நிவேதாவை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று இருந்தேன். அப்போது திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் அவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தேன்.
பின்னர் என்னுடைய நண்பன் நவீன் குமார் வரவைத்து செல்போனை குட்டையில் வீசி விட்டு அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு சென்று விட்டோம். கைப்பையை எனது வீட்டு பகுதியில் புதைத்து விட்டேன் என வாக்குமூலம் கொடுத்தார். இந்நிலையில் போலீசார் நிவேதா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தாரா.? என்பதை தெரிந்துகொள்ள உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…