பேஸ்புக் மூலம் நெருங்கி பழகிய காதலன்..! கர்ப்பமடைந்த காதலி ..!பின் நடந்த விபரீதம் ..!
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பில் திருமணமாகாத (31) ஒரு வயது இளம்பெண் ஒருவர் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை பணியாற்றுகிறார். இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டனர். இதனால் தன்னுடைய அண்ணனுடன் வசித்து வருகிறார்.
எப்போதுமே சமூக வலைதளத்தில் மூழ்கி கிடைக்கும் இவர் முகநூல் மூலமாக திருநெல்வேலியை சேர்ந்த விஜய் சங்கர் என்பவர் அறிமுகமானார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு பழகி வந்து உள்ளனர்.பிறகு வெகு நாட்களாக இருவரும் தொலைபேசி மூலமாக பேசி வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து விஜய்சங்கர் வேலூருக்கு வரத் தொடங்கியுள்ளார். வேலூருக்கு வரும் விஜய் சங்கர் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உள்ளார். இதனால் அந்த ஆசிரியை 2 மாதம் கர்ப்பம் அடைந்தார். இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஒரு மாதத்திற்கு முன் வேலூர் வந்த விஜய் ஷங்கரை அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். விஜய் சங்கருக்கு தனியார் நிறுவனத்தில் வேலையும் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் இருவரும் திருமணம் ஆகாமலே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.ஆனால் அக்கம் பக்கத்தினர் தவறாக பேசினர்.
இதனால் இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் விஜய் சங்கர் நீ சமூக வலைத்தளங்களில் அதிக ஆண்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தூங்கி கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை விஜய்சங்கர் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் இளம் பெண்ணிற்கு கழுத்தில் ,வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் வீட்டிற்கு வெளியே வந்த அந்த இளம்பெண் கதவின் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு தன் சகோதரனின் காரில் மருத்துமனை சென்றுள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இது குறித்து கேள்விகள் எழுப்பினர்.
தனக்கு நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது விஜய் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.