‘Love you தாத்தா’ – தனக்கு கடிதம் எழுதிய 3-ஆம் வகுப்பு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்த முதல்வர்…!
இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் விதர்சன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை நேரில் காண விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாணவனின் இந்த ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்துள்ளார். தந்திர தின விழாவை காண்பதற்காக மாணவர் விதர்சன் சென்னை அழைத்து வரப்பட்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதலமைசர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்வை நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து விதர்சனின் தாயார் அமுதவல்லி அவர்கள் கூறுகையில், எனது மகனின் ஆசையின்படி எங்களை சென்னை அழைத்து தங்க வைத்து கொடியேற்றும் நிகழ்வை நேரில் காணச் செய்த முதல்வர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதே போல் மாணவன் விதர்சன், என் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி, ‘Love you தாத்தா’ என தெரிவித்துள்ளார்.
பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிறைவேற்றி… pic.twitter.com/NYap9NO4wd
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 15, 2023