மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம்..!
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று வந்த, மகேந்திரன்-தீபா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், மகேந்திரன் என்பவரும், தீபா என்ற பெண்ணும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது. மகேந்திரன்-தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு, திருமண பரிசாக பணி ஆணையை வழங்கினார்.
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன்-தீபா இருவரும் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.