கொரோனா ஒழிப்பில் ஈடுபடும் இவர்களுக்கு அன்பும், நன்றியும்! உதயநிதி ட்வீட்!
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி.
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் செவிலியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஒழிப்பில் அரசின் இயலாமையை தங்களின் தியாகங்களால் இட்டு நிரப்ப முயலும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அன்பும் நன்றியும். அர்ப்பணிப்போடு இயங்கும் இவர்களைக் காக்கவேண்டியதும், இவர்களின் தியாகங்களைப் போற்றவேண்டியதும் அரசின் கடமை!’ என பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஒழிப்பில் அரசின் இயலாமையை தங்களின் தியாகங்களால் இட்டு நிரப்ப முயலும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அன்பும் நன்றியும். அர்ப்பணிப்போடு இயங்கும் இவர்களைக் காக்கவேண்டியதும், இவர்களின் தியாகங்களைப் போற்றவேண்டியதும் அரசின் கடமை!
— Udhay (@Udhaystalin) June 18, 2020