பரபரப்பு:சாலையோரத்தில் சிதறி கிடந்த வாக்குச்சீட்டுகள்.!

Published by
murugan
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி  தேர்தலுக்கான முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • இன்று பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் திமுக கூட்டணி  மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.

இந்நிலையில் பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன. அந்த இளஞ்சிவப்பு சீட்டுகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டு .

இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்தனர்.பொதுவாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட  வாக்குச்சீட்டுகளை ஆறு மாதம் வரை பாதுகாக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

Image result for சாலையோரத்தில் சிதறி கிடந்த

அப்படியிருக்கையில் தேர்தல் முடிந்த அடுத்த மறுநாளே வாக்குச்சீட்டுகள் ரோட்டோரத்தில் சிதறி  கிடப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சிதறிக்கிடந்த வாக்கு சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணப்பட்டதா..? அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திருடப்பட்டு ரோட்டோரத்தில் வீசப்பட்டதா..? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Recent Posts

நான்காவது டி20 யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…

6 hours ago

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா – விசிக தலைவர் திருமா ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…

8 hours ago

பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

9 hours ago

தடுமாறும் இந்திய அணி வீரர்கள்.., 4வது டி20யில் மளமளவென சரியும் விக்கெட்டுகள்!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

9 hours ago

களத்திற்கு செல்ல தயங்க கூடாது! தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!

சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…

10 hours ago

நெருங்கும் டெல்லி தேர்தல்., 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா!

டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…

11 hours ago