‘பைக் மீது உரசிய லாரி’.! டயருக்கு அடியில் சிக்கி இருபெண்கள் பலி..பதறவைத்த அதிர்ச்சி வீடியோ.!
- திருப்பூர் மாவட்டம் பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
- அப்போது இரு பெண்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இடித்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இரு பெண்கள். இவர்கள் பணியை முடித்துவிட்டு அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருவரும் கருவலூர் வழியாக செல்லும்பொழுது, அந்த வழியில் பின் தொடர்ந்து இரும்பு லோடோட வந்துகொண்டிருந்த லாரி, அந்த இரு பெண்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென லாரி அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது இடித்தது.
அதனிடையே லாரி அவர்களின் இரு சக்கர வாகனத்தில் இடித்தும், நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் இருவரும், லாரியின் பின்பக்க சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.