சென்னை சாலையில் கொட்டி கிடக்கும் பருப்பு மூட்டைகள்
சென்னை எண்ணூரில் இருந்து குடிமைப் பொருள் ஏற்றிச் சென்றுக் கொண்டு, சேலத்திற்கு லாரி புறப்பட்டது. தாம்பரம் அடுத்த இரும்புலியூர் வழியாக சென்றது. அப்போது மேம்பால வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
அதில் லாரியில் இருந்த 20 டன் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையில் கொட்டின.அதிக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் கொட்டிய பருப்பை எடுக்க முடியவில்லை இதனால் வாகனங்கள் அதன் மேலேயே சென்றதால், மூட்டைகள் அனைத்தும் வீணானது. இதுகுறித்து குடிமைப் பொருள் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பருப்பு மூட்டைகளை சரிவரக் கட்டவில்லை என்று தெரிகிறது. மேலும் லாரி ஓட்டுநர் நளநாதனுக்கு காயம் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலீசார் இது குறித்து விசரானை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
source:dinasuvadu.com