பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை – மு.க ஸ்டாலின் அறிக்கை.!
ஸ்விகி ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர் – முக ஸ்டாலின்
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று ஸ்விகி (swiggy) உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் என்னை சந்தித்தார்கள். தங்களின் ஊதியத்தையும், ஊக்க தொகையையும் நிறுவனம் குறைந்திருப்பதாகவும், போராடிய 10000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் மன உளைச்சளையும் வெளிப்படுத்தினார்கள்.
மேலும், பேரிடர் காலத்தில் அனைவரின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனையாக உள்ளது. தமிழக அரசு இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை ஸ்விகி நிறுவனமும், அதிமுக அரசும் கண்டுகொள்லாமல், முதல்வரோ, தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ தீர்வு காண முயற்சி செய்யாமல் தவறான அணுகுமுறை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று @swiggy_in ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர்.
பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை! @CMOTamilNadu இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்! pic.twitter.com/njSOCF42ZO
— M.K.Stalin (@mkstalin) August 20, 2020