போதைப்பொருள் கடத்தல் வழக்கு – ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Jaffer Sadiq

Jaffer Sadiq : ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் அரசியல் சார்ந்தவரும், சினிமா திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Read More – பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

சமீபத்தில் டெல்லியில் சுமார் ரூ.2,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுடன், திமுகவின் ஜாபர் சாதிக்கின் தொடர்பு பெரிதளவு இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.

Read More – இதுதான் நிபந்தனை… பணிப்பெண் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.!

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் ஆஜராக ஜாபர் சாதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், ஆஜராகாமல் அவர் தலைமறைவானார். பின்னர் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த போதைப்பொரு கடத்தல் வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Read More – ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

இந்த நிலையில், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க தற்போது லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சமீபத்தில் டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2,000 மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிபட்டது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முகேஷ், முஜிபுர் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்