பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
சில்லரை கடன் பிரிவில், பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து, கடன் தரவுகள் நிறுவனமான ”கிரிப் ஹைமார்க்’ ஒரு பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள் கடன் வாய்ப்பு வசதிகளை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். என்ற தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன.
முதல்வர் ட்வீட்
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே!
வீடு – வணிகம் – சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.
பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, தேசிய மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…