வெள்ள நிவாரணம் டோக்கன் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

TN Minister Udhayanidhi Stalin

மிக்ஜாம் புயலினால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் , தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் என  தெரிவித்துள்ளார். மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

புயல் மழை பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி நிச்சயம் போதாது, நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க கூறும் எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற்றுத் தர வேண்டும்.  மத்திய அரசில்  உள்ள தங்கள் நண்பர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசி கூடுதல் நிதியை பெற்று தர வேண்டும்’ என கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்