மதுராந்தகம் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
முழு கொள்ளளவை எட்ட உள்ள மதுராந்தகம் ஏரி திறக்கப்பட உள்ளதால், உபரி நீர் வெளியேறும் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏறி அதன் முழு கொள்ளளவான 23 அடியை கொண்டுள்ளது. இந்நிலையில், அதன் அடியில் 22 அடியை எட்டியதால் கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுருத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் “நிவர்” புயல் காரணமாக பெய்த அதீத மழை பொழிவினால் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரவு அதிகமானதால் மதுராந்தகம் ‘ஏரி’ அதன் முழு கொள்ளளவினை தற்பொழுது அடையும் நிலையில் உள்ளது.
இதனால், ஏரிக்கு வரும் வெள்ள மழை நீர் உபரி நீராக ஏரியின் கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்றிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உபரிநீர் செல்லும் கிளியாற்றினை ஒட்டிய கரையோர கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றிற்கு செல்ல வேண்டாம் எனவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.