“பன்னெடுங்காலமான கோரிக்கை;அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி” – சீமான்..!

Default Image

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில்,இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்,பன்னெடுங்காலமான கோரிக்கையான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி என்று சீமான் கூறியுள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை இன்னும் விரிவாக்கம் செய்து, செயலாக்கம் செய்ய வேண்டுமெனும் விருப்பத்தை முன்வைத்து, இத்தகைய சீர்மிகு நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.

இதேபோல, ஆதித்தமிழ்க்குடிகளுக்கு வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்க வழிவகைகளை செய்யதமிழக அரசு முன்வர வேண்டுமென கோருகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்