எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்று பெயர் மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தவர்கள். சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள்.தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்,தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு.இதை குறை கூறும் தகுதி அரசியல் கத்துகுட்டியான உனக்கும் கிடையாது உனக்கு கத்து கொடுத்த தத்துகுட்டிக்கும் கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…