தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

Default Image

எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு  சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம்  செய்யப்படும் என்றும் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்று பெயர் மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தவர்கள். சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள்.தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்,தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு.இதை குறை கூறும் தகுதி அரசியல் கத்துகுட்டியான உனக்கும் கிடையாது உனக்கு கத்து கொடுத்த தத்துகுட்டிக்கும் கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்