நீண்ட நேர இழுபறி ! ஒருவழியாக சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன்
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியை பொருத்தவரை காலையில் இருந்து வரை மாறி மாறி திமுக கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவன் மற்றும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்து வந்தனர்.
நீண்ட நேரமாகவே இழுபறி நீடித்து வந்தது.மேலும் இந்த தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முடிவுகளை நேரமானதாக அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் ஒருவழியாக இரவு 12 மணிக்கு மேல் இந்த தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டது.அதில் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நிலவரப்படி தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்–500229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் –497010 வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.மேலும் திருமாவளவனின் இந்த வெற்றி நீண்ட நேரத்திற்கு பின் கிடைத்ததால் அதை கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.