ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி… ஓர் பார்வை…!

Published by
மணிகண்டன்

பெருநகர சென்னை தொழில் நகரமாக விளங்க முக்கிய காரணமாக விளங்குகிறது ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி. 2008 மறுசீரமைப்பிற்கு முன்னர் கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியானது மறுசீரமைப்பிற்கு பின் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், என மிக முக்கிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தொழில்ரீதியாக மிகசக்திவாய்ந்த மக்களவை தொகுதியாக மாறிவிட்டது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி.

வெளியூர் மக்கள் :

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் அதிக அளவிலான தொழிற்சாலைகளை உள்ளடக்கி அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இருந்தும், இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கமும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகம் என்றே கூறலாம்.

ஸ்டார் தொகுதி :

தொழில்துறை வளர்ந்து நிற்கும் இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இதுவரை திமுகவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது. 2014இல் இந்த தொகுதியை தவறவிட்டாலும், 2019ஆம் ஆண்டு மீண்டும் வென்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை ஸ்டார் தொகுதியாக மாற்றியுள்ளார் திமுக மூத்த நிர்வாகி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு :

2008க்கு சீரமைப்பிற்கு முன்னர் வரையில் டி.ஆர்.பாலுவுக்கு அதிகம் செல்வாக்கு இருந்த அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் பிரிவானது டி.ஆர்.பாலுவை தென் சென்னை வேட்பாளர் என்றிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் என்று மாற்றிவிட்டது. இந்த முறையும் இவருக்கு தான் சீட் என்கிறது திமுக தலைமை வட்டாரங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

திமுக ஆதிக்கம் :

1962முதல் மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. இதுவரையில் 9 முறை (2019 வரையில்) திமுக பக்கமே வெற்றி இருந்துள்ளது. 3 முறை காங்கிரஸ் கட்சி அதுவும் 1984, 1989, 1991 என தொடர்ச்சியாக காங். வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் வென்றுள்ளார். 3 முறை அதிமுக இந்த தொகுதியில் வெற்றியை ருசித்துள்ளது.

தொழில்துறை வளர்ச்சி, பல்துறை நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் என தமிழக தொழில்வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி.

2019 தேர்தல் முடிவுகள் :

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கட்சி வேட்பாளர்கள்,  சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  திமுக வேட்பாளர்  டி.ஆர்.பாலு, பாமக வேட்பாளரான ஏ. வைத்திலிங்கத்தை 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,93,281 வாக்குகளும், பாமக வேட்பாளரான ஏ. வைத்திலிங்கம்  2,85,326 வாக்குகளும் பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் :

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம் குறித்து இதில் பார்க்கலாம்.

தொகுதிகள் வெற்றி தோல்வி
மதுரவாயல் கணபதி கற்பகம் (திமுக)
பெஞ்சமின் (அதிமுக)
அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் (திமுக)
அலெக்சாண்டர் (அதிமுக)
ஆலந்தூர் தா.மோ.அன்பரன் (திமுக)
வளர்மதி (அதிமுக)
ஸ்ரீபெரும்புதூர் கே.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் )
பழனி (அதிமுக)
பல்லாவரம் ஐ.கருணாநிதி (திமுக)
ராஜேந்திரன் (அதிமுக)
தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (திமுக)
T.K.M.சின்னைய்யா (அதிமுக)

வாக்காளர்கள் விவரம் :

ஆண்கள் பெண்கள்
மூன்றாம்   பாலினத்தவர்கள்
  11,69,344   11,88,754       428

 

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

19 mins ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

20 mins ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

28 mins ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

47 mins ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

1 hour ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

2 hours ago