தமிழிசையின் வேட்புமனு நிராகரிப்பு: அமளிக்குப்பின் மீண்டும் சரி செய்து ஏற்பு
- நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை.
குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தான் கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுக சுட்டிக்காட்டியது.
இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனுவை ஏற்கவில்லை. பின்னர் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு அதன் பின்னர் சரியான தகவல்கள் நிரப்பப்பட்ட பின்னர் மீண்டும் தமிழிசையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.