பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூரில் இன்று வாக்குப்பதிவு!
வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.
வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இன்று பிரச்சாரம் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.