“லோக் ஆயுக்தா” தமிழகத்தில் அமைக்காவிடில் வெடிக்கும் போராட்டம்..!ராமதாஸ் காட்டம்..!!!
லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் அமைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஈடுபட்டிருக்கிறது.மேலும் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகியுள்ள நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது மோசடி மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியில் தொடங்கி, அனைத்து அமைச்சர்கள் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.இத்தகைய சூழலில் வலிமையான லோக் ஆயுக்தாவை அமைப்பதன் மூலம்தான் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஒட்டுமொத்த ஊழலையும் குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சியினர், அதற்கு தடையாக இருக்கும் என்பதால்தான் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தயங்குகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு செப்டம்பர் 9-ம் தேதிக்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வராத நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சிறை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் தான் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசு தாமதப்படுத்துகிறது மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றிவிட்டு அந்த அமைப்பை உருவாக்காமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 6-ம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைய போகிறது. அதற்குள் அப்பழுக்கற்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாவிட்டால், சட்டம் இயற்றப்பட்டதன் 100-வது நாளில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
DINASUVADU