அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியானது!வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்
- அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 17-ம் தேதி வெளியிட்டுள்ளது.
- அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 17-ம் தேதி வெளியிட்டுள்ளது.மேலும் நேற்று பா.ம.க சார்பில் மற்றும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று காலை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்
- காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை.
- மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
- வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
- நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க வலியுறுத்துவோம்.
- வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
- புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.
- எம்ஜிஆர் தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.
- ஜாதி சான்றிதலில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.
- மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை.
- பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்துவோம்.
- பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம்.
- புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்