மக்களவை தேர்தல் – அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு!
மக்களவை தேர்தலையொட்டி தொகுதிக்குள் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஆயுத்த பணிகளை தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான தேதி மற்றும் அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More – எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.. வெளியான யுவராஜா அறிக்கை..!
இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், கடந்த வாரம் இறுதியில் 2 நாட்கள் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு, தேர்தல் தொடர்பாக அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். இதன்பின் தென் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, முன்னதாக சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளும், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி செய்த அதிகாரிகளும் மக்களவை அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என இருந்தது.
Read More – பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு..!
தற்போது தேர்தல் ஆணையத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதால், ஒரே நாடாளுமன்ற தொகுதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது. ஒரே தொகுதிக்குள் அரசு அதிகாரிகள் பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதாவது, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்தலின்போது மாநில அரசுகள் முறைகேடு செய்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read More – மார்ச் 3-ம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும் – எம்.பி சுப்புராயன்..!
இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தொகுதிக்குள் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் பணியாற்றாதவாறு அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.