மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அறிக்கையில், “18வது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையின்கீழ், தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்.
லோக்சபா தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறையாக, மாற்றத்திற்கான ஊக்கியாக உங்கள் பங்கை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கிறது.
மோடியின் தலைமையில் உலக வல்லரசாக மாறுவதற்கான பாதையில் இந்தியா செல்கிறது” என்று கூறிஉள்ளார். மேலும், ஆந்திரா மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…