மக்களவை தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்பமனு தாக்கல்
- மக்களவை தேர்தலுக்கு திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகிறது.
- மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் மக்களிடம் செல்வோம் , மக்களிடம் சொல்வோம் , மக்களின் மனதை வெல்வோம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம் ஊராட்சி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கிராம சபை கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று வந்தார்.கிட்டத்தட்ட தூத்துக்குடியில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு சென்று கிராம சபை கூட்டதை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.