DMK & ADMK: மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தின.
இதில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நேர்காணலில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் பங்கேற்றார். கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுடன் அவர் நேர்காணல் நடத்தினார்.
அதே போல அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…