மக்களவை தேர்தல்..! விறுவிறுப்பாக நடைபெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

DMK & ADMK: மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தின.

Read More – மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

இதில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரம் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நேர்காணலில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் பங்கேற்றார். கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுடன் அவர் நேர்காணல் நடத்தினார்.

Read More – திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.!

அதே போல அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்