மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் மும்மரம்.. பாஜகவிடம் தமாகா கேட்பது என்ன?
Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இம்மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது.
Read More – இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..!
தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், அதிமுகவில் இன்னும் கூட்டணியே இறுதியாகவில்லை. இருப்பினும், தேமுதிக, பாமகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதேபோல், பாஜகவும் அந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில், அறிவித்தார். அதிகாரப்பூர்வமாகவும் தமிழக பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தார்.
Read More – போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் மறைவு.! சொந்த ஊரில் நல்லடக்கம்…
பாஜகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையததை அடுத்து, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் சூடுபிடித்துள்ளது. அதன்படி, 4 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்குமாறு பாஜகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More – நாடாளுமன்ற தேர்தல்..! அதிமுக விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு
தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, ஆரணி, சிதம்பரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் 4 ஒதுக்குமாறு பாஜகவிடம் தமாகா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று அல்லது நாளை உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.