மக்களவை தேர்தல்: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – திமுக அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. தேசிய கட்சிகளுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக என தனித்தனி கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் குறிப்பாக, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு.!
அதன்படி, ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் குழு என மூன்று குழுக்களை திமுக அமைத்து, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் விரும்புபவர்களுக்கு அக்கட்சி தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 19ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
எனவே, தேர்தல் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1ம் தேதி 7ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ரூ.2,000 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.