விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு..!
விழுப்புரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் எனவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என வர்த்தக சங்கம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வர்த்தக சங்கம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிவித்தனர்.
மேலும், அங்கு மருந்துக்கடையில் மட்டும் முழு நேரம் திறந்திருக்கும் எனவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.