சிதம்பரத்தில் மண்டபத்தை பூட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ! போலீசார் வழக்கு பதிவு

Default Image

கொரோனா வைரஸால் இந்தியாவில் 4000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு திட்டமிடப்பட்ட  நிகழ்ச்சி களுக்கு 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக சிதம்பரம் அருகே நடைபெற்ற விழாவில்  
அனுமதியின்றி ஏராளமானோர் கலந்து கொண்டதால், போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்தவிழாவில்  முகக்கவசம் அணியாமலும்,  இடைவெளி இல்லாமல்  கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்திற்கு போலீசார் வந்த போது, உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டிக் கொண்டு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீசார்  அவர்களை எச்சரித்து  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்