தலைநகர் சென்னையில் கொரோனா உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் கட்டுப்படுத்த மீண்டும் அங்கு லாக்டவுன் அமல்படுத்தப் பட்டது.கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் லாக்டவுன் ஆனது அமல்படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் ஆனது கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட இம்முறை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: லாக்டவுன் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். சென்னையில் முதல் நாளில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் குறைந்து உள்ளது.மேலும் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் 2,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.அதுமட்டுமல்லாமல் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில்முக ககவசம் அணியாதவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதன்படி 986 பேர் மீது முக கவசம் அணியாதன் காரணமாக வழக்கு பதியப்பட்டு உள்ளது.இதில் வடசென்னை பகுதியில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…