தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் இங்குள்ள தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தமிழ் தேசிய கட்சியினர் வடமாநிலத்தவகளின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர்.அதன்படி நேற்று வடமாநிலத்தை சேர்ந்தவரிகளின் 4 கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டு அருகே துண்டு பிரசுரங்களையும் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதில் தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கின்ற வடமாநிலத்தவர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் நாங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்றும் மற்றோரு போஸ்டரில் திரும்பி போ திரும்பி போ வடமாநில வெளிமாநில கூட்டமே தமிழ் மண்ணைவிட்டு திரும்பி போ போ.! என்று வசைபாடக்கூடிய வாசகங்களுடன் இந்த போராட்டமானது நடைபெற்றது.மேலும் தமிழ் தேசிய கட்சியினர் கடைகளை திறக்கக்கூடாது என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இவ்வாறான போராட்டம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்தது.இந்நிலையில் கடையை திறக்கவந்த கடை உரிமையாளர்கள் தான் போட்ட பூட்டைத் தாண்டி மற்றொரு பூட்டு போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவைக்கு தகவலை தட்டிவிடவே வணிகர்கள் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.பின்னர் பூட்டு போட்ட இருந்த 4 கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் 50 வெளிமாநில கடைகளின் உரிமையாளர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களுடைய கடைக்களுக்கு பூட்டுப் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் மனுக்களையும் அளித்தனர்.
இதே பாணியில் திருச்சி மாவட்டத்திலும் கடைகளுக்கு பூட்டு போராட்டம் நடைபெற்று உள்ளதுபோராட்டத்தை தமிழ தேசிய கட்சியினர் நேற்று காலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு முன்பு திரண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் பின் வடமாநில கடைகளுக்கு பூட்டு போட முயன்றுள்ளனர் அவ்வாறு முயன்ற தமிழ் தேசிய கட்சியினரை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவோடு இரவாகவே வட மாநிலத்தவர்கள் நடத்துகின்ற கடைகளுக்கு எல்லாம் பூட்டு போட்டு கடை மீது துண்டு பிரசுரங்களை ஒட்டிவைத்துவிட்டு சென்று உள்ளனர். காலை கடையை திறக்க வந்த கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியாகி பூட்டு விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் பூட்டு போடப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…