தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.! – அரசு அறிவிப்பு.!
தமிழகத்தில் நாளை நிறைவடைய இருந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏற்கனவே நாளை வரை நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளை முடிவடைய இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தததால் ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் நாளை நிறைவடைய இருந்த ஊரடங்கு இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.